அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது அனுப்பிய கடிதத்தை துருக்கி ஜனாதிபதி டயிப் எர்டோகன் குப்பை தொட்டியில் வீசியெறிந்தார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.ஒன்பதாம் திகதி துருக்கி ஜனாதிபதிக்கு அமெரிக்க ஜனாதிபதி கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.
அந்த கடிதத்தில் துருக்கி ஜனாதிபதியை கடினமான நபராகயிருக்கவேண்டாம் முட்டாளாகயிருக்கவேண்டாம் என டிரம்ப் கேட்டிருந்தார்.
நீங்கள் ஆயிரக்கணக்கானவர்களின் கொலைக்கு காரணமாக மாறாக்கூடாது – துருக்கியின் பொருளாதாரத்தை அழித்தேன் என அவப்பெயரை சுமக்க நான் விரும்பவில்லை என டிரம்ப் அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
துருக்கி பிரதமர் அந்த கடிதத்தை முற்றாக நிராகரித்தார் ஜனாதிபதி வட்டாரங்கள் பிபிசிக்கு தெரிவித்துள்ளன.

கடிதம் கிடைத்து மறுநாளே துருக்கி ஜனாதிபதி குர்திஸ் பகுதிகள் மீதான நடவடிக்கையை ஆரம்பித்திருந்தார்.
துருக்கி பிரதமர் அந்த கடிதத்தை முற்றாக நிராகரித்தார் ஜனாதிபதி வட்டாரங்கள் பிபிசிக்கு தெரிவித்துள்ளன.
துருக்கி ஜனாதிபதி அந்த கடிதத்தை பெற்றுக்கொண்டார் அதனை முற்றாக நிராகரித்தார் அதனை குப்பை தொட்டிக்குள் வீசினார் என ஜனாதிபதி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.