உலகின் வறுமையான நாடுகளின் பட்டியல் போகஸ் எகனொமிக்ஸ் (Focus Economics) என்ற பொருளாதார ஆய்வு நிறுவனத்தின் அறிக்கைக்கு அமைய வெளியிடப்பட்டுள்ளது. 126 நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தியை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கைக்கு அமைய உலகின் வறுமையான நாடுகளின் பட்டியலில் கொங்கோ குடியரசு முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதேவேளை இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள் முறையே மொசாம்பிக் மற்றும் உகண்டா ஆகிய நாடுகள் பெற்றுக்கொண்டுள்ளன.
இந்தப்பட்டியலில் இலங்கை 36 ஆவது இடத்தில் காணப்படுகிறது. 2017 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படியும், இலங்கை 36 ஆவது இடத்தையே பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் முறையே 19 மற்றும் 12 ஆம் இடங்களைப் பிடித்துள்ளன.
மேலும் ரஷ்யா 71 ஆவது இடத்தையும் சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் முறையே 69 மற்றும் 121 ஆவது இடங்களை பிடித்துள்ள அதேவேளை, லக்ஷம்பர்க் இறுதி இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.