சஜித்தின் கூட்டம் காலி முகத்திடலில் ஆரம்பம்

கொழும்பு: புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. கொழும்பு காலி முகத்திடலில் இக்கூட்டம் இடம்பெற்று வருகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இக்கூட்டம் இடம்பெறுவதோடு, அதில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read the rest of this entry »

பாகிஸ்தான்பாதுகாப்புப்படையினரை கௌரவித்த இலங்கை அணி

img_3062இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் 10 பேர் பாதுகாப்பு காரணங்களை காட்டி பாகிஸ்தானுடனான தொடரினை புறக்கணித்த நிலையில் இளம் வீரர்களை கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தானுக்கு கடந்த 24 ஆம் திகதி புறப்பட்டுச் சென்றது. பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூர் மைதானங்கில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று இருபதுக்கு – 20 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்திய இலங்கை அணியானது ஒருநாள் தொடரை 2:0 என்ற கணக்கில் பறிகொடுத்தபோதிலும், இருபதுக்கு – 20 தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தானை வைட் வோஷ் செய்தது. Read the rest of this entry »