பாகிஸ்தானுக்கு “தண்ணி” காட்டிய இலங்கை இளம் அணி!

லாகூர்: பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு – 20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரினை இலங்கை அணி பறிகொடுத்திருந்தாலும், இருபதுக்கு – 20 தொடரில் இளம் வீரர்களின் அசத்தலான ஆட்டம் காரணமாக முதல் இரு போட்டிகளையும் வெற்றிகொண்டது.

இந் நிலையில் மூன்றாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று (9) லாகூர் கடாபி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பாமனது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை குவித்தது.

இதன் பின்னர் 148 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 13 ஓட்டத்தால் தோல்வியைத் தழுவியது.

பாகிஸ்தான் அணி சார்பில் பாகர் சமான் டக்கவுட்டுடனும், பாபர் அசாம் 27 ஓட்டத்துடனும், ஹரிஸ் சொஹெல் 52 ஓட்டத்துடனும் சப்ராஸ் அஹமட் 17 ஓட்டத்துடனும், இமாட் வஸிம் 3 ஓட்டத்துடனும், அஷீப் அலி ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க இப்திகார் அஹமட் 17 ஓட்டத்துடனும், வஹாப் ரியாஸ் 12 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் வசிந்து ஹசரங்க 3 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 2 விக்கெட்டுக்களையும், கசூன் ராஜித ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 தொடரை இலங்கை அணி 3:0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தானை வெள்ளையடிப்பு செய்துள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s