அநுராதபுர  மாவட்டத்தில்  தபால் மூல வாக்குப்பதிவுக்காக  விண்ணப்பித்த  விண்ணப்பங்களில்  6000  விண்ணப்பப்படிவங்கள்  நிராகரிக்கப்பட்டுள்ளதாக  அநுராதபுரம்  மாவட்ட   அரசாங்க  அதிபர்  ஆர்.எம்.வன்னினாயக்க  தெரிவித்தார். இம்முறை  ஜனாதிபதித்  தேர்தலின்  போது  தேர்தல்  கடமைகளில்  ஈடுபடுவதற்காக  எதிர்பார்க்கும்  தபால்  மூல  வாக்குப்பதிவுக்காக  விண்ணப்பித்துள்ள  ஐம்பத்து மூவாயிரம்  (53000) விண்ணப்பப்படிவங்களிலேயே  ஆறாயிரம்  விண்ணப்பப்படிவங்கள்  சில   குறைபாடுகள் காரணமாக  நிராகரிக்கப்பட்டுள்ளது  என  அரசாங்க  அதிபர்  மேலும்  தெரிவித்தார்.