பாகிஸ்தானுக்கு “தண்ணி” காட்டிய இலங்கை இளம் அணி!

லாகூர்: பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு – 20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரினை இலங்கை அணி பறிகொடுத்திருந்தாலும், இருபதுக்கு – 20 தொடரில் இளம் வீரர்களின் அசத்தலான ஆட்டம் காரணமாக முதல் இரு போட்டிகளையும் வெற்றிகொண்டது. Read the rest of this entry »

ஜனாதிபதி தேர்தல் 2019: அறியவேண்டிய 10 சுவாரஸ்ய தகவல்கள்

  • ஆட்சியிலுள்ள ஜனாதிபதியொருவர், ஆட்சியிலுள்ள பிரதமர் மற்றும் பதவியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் போட்டியிடாத ஒரு ஜனாதிபதித் தேர்தல் இது.
  • இலங்கை வரலாற்றில் அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாக இது பதிவாகியுள்ளது. (35 வேட்பாளர்கள்) Read the rest of this entry »

சிரியாவில் ஐ. எஸ் இயக்கத்தை விரட்டியவர்களை கைவிட்ட அமெரிக்காவும், துருக்கியின் இராணுவ நடவடிக்கையும்

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது

வடக்கு சிரியாவில் .எஸ் இயக்கத்தினரை அழிப்பதற்கு அமெரிக்காவால் கட்டியமைக்கப்பட்ட குர்திஷ் போராளிகள் மீது துருக்கி இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள போகின்றது என்பது தெரிந்தவுடன் அவர்களை கைவிட்டுவிட்டு அமெரிக்கப் படைகள் வடக்கு சிரியாவைவிட்டு வெளியேறுகின்றனர்.  அமெரிக்கப்படைகள் முழுமையாக வெளியேற முன்பே துருக்கி படையினர்கள் குர்திஷ் போராளிகளின் நிலைகள் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளார்கள். Read the rest of this entry »

அநுராதபுரத்தில் 6,000 தபால் வாக்கு விண்ணப்பங்கள் நிராகரிப்பு

அநுராதபுர  மாவட்டத்தில்  தபால் மூல வாக்குப்பதிவுக்காக  விண்ணப்பித்த  விண்ணப்பங்களில்  6000  விண்ணப்பப்படிவங்கள்  நிராகரிக்கப்பட்டுள்ளதாக  அநுராதபுரம்  மாவட்ட   அரசாங்க  அதிபர்  ஆர்.எம்.வன்னினாயக்க  தெரிவித்தார். இம்முறை  ஜனாதிபதித்  தேர்தலின்  போது  தேர்தல்  கடமைகளில்  ஈடுபடுவதற்காக  எதிர்பார்க்கும்  தபால்  மூல  வாக்குப்பதிவுக்காக  விண்ணப்பித்துள்ள  ஐம்பத்து மூவாயிரம்  (53000) விண்ணப்பப்படிவங்களிலேயே  ஆறாயிரம்  விண்ணப்பப்படிவங்கள்  சில   குறைபாடுகள் காரணமாக  நிராகரிக்கப்பட்டுள்ளது  என  அரசாங்க  அதிபர்  மேலும்  தெரிவித்தார். 

பிள்ளையை காப்பாற்ற தன் உயிரை விட்ட தந்தை

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் நேற்று (08) மாலை உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றதுஇவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை-அபயபுர, ரயில்வே லைன் பகுதியைச் சேர்ந்த என் ஜோஹான் ஜோசப் (27 வயது) எனவும் தெரியவருகின்றது.  Read the rest of this entry »