எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று நண்பகல் 12 மணிவரை 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். அரசியல் கட்சிகள் சார்பில் 19 பெரும் சுயேச்சைகளாக 22 பேரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
கட்டுப்பணம் செலுத்தியவர்கள் விபரம் வருமாறு:
கட்சிகள் சார்பில்
* சஜித் பிரேமதாச: ஜனநாயக தேசிய முன்னணி
* நந்தசேன கோத்தாபய ராஜபக்ஷ: பொதுஜன பெரமுன
* திருமதி அஜந்தா விஜேசிங்க பெரேரா: இலங்கை சோசலிச கட்சி
* வெலிசரகே சமன பிரசன்ன பெரேரா: எங்கள் மக்கள் சக்தி கட்சி
* ஆரியவன்ச திசாநாயக்க: ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி
* சிறிதுங்க ஜயசூரிய: ஐக்கிய சோசலிசக் கட்சி
* பெத்தேகமகே நந்தமித்ர: நவசமசமாஜக்கட்சி
* சரத் மனமேந்திர: நவசிஹல உறுமய
* பல்லேவத்த கமராலகே றொஹான் பல்லேவத்த: ஜாதிக சங்வர்தன பெரமுன
* நம்புநாம நாணயக்கார வஜிரபானி விஜேசிரிவர்தன: சோசலிச சமத்துவ கட்சி
* ஏ. எஸ். பி. லியனகே: இலங்கை தொழிற்கட்சி
* பத்தரமுல்லே சீலரத்ன தேரோ: ஜனசெத்த பெரமுன
* ஜயந்த லியனகே: சிங்கள தீப தேசிய முன்னணி
* துமிந்த நாகமுவ: முன்னிலை சோசலிச கட்சி
* மகேஸ் சேனாநாயக்க: தேசிய மக்கள் கட்சி
* அருண டி. சொய்சா: ஜனநாயக தேசிய அமைப்பு
* பிரியந்த முனஹத் எதிரிசிங்க: ஒக்கொம வெசியொ ஒக்கொம ரஜவரு அமைப்பு
* நாமல் ராஜபக்ஷ: தேசிய ஒற்றுமை முன்னணி
* சுப்ரமணியம் மணிரத்னம்: அபே ஜாதிக பெரமுன
சுயேச்சையாக கட்டுப்பணம் செலுத்தியோர்
* ஜயந்த கெட்டகொட பெரேரா
* சிறிபால அமரசிங்க
* அப்பரெக்கே பஞ்ஞானந்த தேரோ
* வர்ணகுல சூரிய மில்ரோய் சர்தியல் பெர்னாண்டோ
* அநுரகுமார திசாநாயக்க
* சந்திரசேகர ஹேரத் சமன்சிறி
* சரத் கீர்த்திரத்ன
* சமிந்த அநுருத்த
* சமரவீர வீரவன்னி
* அசோக வடிகமங்காவ
* பஷீர் சேகுதாவூத்
* ஐதுருஸ் முஹம்மத் இலியாஸ்
* பியசிறி விஜேநாயக்க
* ரஜீவ விஜேசிங்க
* குமார வெல்கம
* சமல் ராஜபக்ஷ
* அஜந்த டி சொய்சா
* எம். கே. சிவாஜிலிங்கம்
* எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்
* ஏ. எச்.எம். அலவி
* திஸ்ஸகுட்டி ஆரச்சி
* மஹீபால ஹேரத்
(எம். ஏ. எம். நிலாம்)