கல்முனை மாநகர சபையில் உணவுக் கட்டுப்பாடு அதிகார சபை ஸ்தாபிப்பு

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை: கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உணவு வகைகளின் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு உணவுக் கட்டுப்பாடு அதிகார சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி .எம்.றகீப் அவர்களின் தலைமையில் இன்று வியாழக்கிழமை மாநகர முதல்வர் செயலகத்தில் இடம்பெற்ற சுகாதாரத்துறை விசேட கூட்டத்தின்போது இவ்வதிகார சபையின் அவசியம் குறித்தும் அதன் செயற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. Read the rest of this entry »

யாழ் சர்வதேச விமானநிலையமாகிறது பலாலி

யாழ்ப்பாணம்: பலாலி விமான நிலையத்திற்கு யாழ் சர்வதேச விமானநிலையம் என்று  பெயரிடுவதற்கு தீர்மானித்திருப்பதுடன், சர்வதேச பயணங்களுக்காக எதிர்வரும் 17 ஆம் திகதியளவில் விமானநிலையத்தைத் திறந்துவைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. பலாலி விமான நிலையத்திற்கு யாழ் சர்வதேச விமானநிலையம் என்று பெயரிடுவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.  Read the rest of this entry »