றியாத்: சவுதி அரேபிய மன்னரின் மெய்ப்பாதுகாவலர்  தனிப்பட்ட தகராறு காரணமாக அவரது நண்பரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சவுதி அரேபிய மன்னர் சல்மானின் மெய்ப்பாதுகாவலரான ஜெனரல் அப்தெல் பாகம் என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நண்பர் ஒருவரை பார்க்கசென்றவேளை எழுந்த தகராறினால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வீட்டிலிருந்து வெளியே வந்த அந்த நண்பர் மன்னரின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டார் பின்னர் காவல்துறையினர் அவரை சரணடையுமாறு கேட்டவேளை அவர் மறுத்ததை தொடர்ந்து அவரும் சுட்டுக்கொல்லப்பட்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் காரணமாக ஏழுபேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட மன்னரின் மெய்ப்பாதுகாவலர் சவுதிஅரேபியாவில் நன்கு அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மன்னரினது மிக நெருக்கமான நண்பராக காணப்பட்டார்.