“சமூகத்தை ஹராத்தை விட்டும் பாதுகாக்க மஸ்ஜித்களில் கடன் திட்டங்களை திட்டமிடுவோம்” – ஜூம்மா உபதேசத்தில் அஷ்ஷைக் யஹ்யா மௌலவி

காத்தான்குடி மெத்தைப்பள்ளிவாயல் 27/09 ஜூம்மா உபதேசத்தில் அஷ்ஷைக் யஹ்யா மௌலவி

எந்த ஊரில் வட்டியும், விபச்சாரமும் பகிரங்கமாக ஆகிவிடுமோ, 
அவர்கள் அல்லாஹ்விடம்
” நாம் உனது தண்டனையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்” என அல்லாஹ்விடம் துணிவு கொள்வதற்கு சமம் எனவும் எனவே இவ்விரு விடயங்களில் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும் என மக்களுக்கு வட்டி மற்றும் விபச்சாரம்,
போன்ற தவறான பழக்கங்களின் விளைவுகளை மிகவும் தெளிவாக முன்வைத்ததுடன் அதில் இருந்து சமூகத்தை பாதுகாக்க வேண்டியது காலத்தின் தேவை என்பதையும் நேற்றைய காத்தான்குடி மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் அஷ்ஷைக் யஹ்யா மௌலவி அவர்கள் தனது ஜூம்மா உரையில் தெளிவுவடுத்தினார்கள்.
மேலும் அவர்களது உரையில், 
கடன் கொடுப்பதன் நன்மையையும், 
கடன் கொடுப்பவர் நடந்து கொள்ள வேண்டிய முறையும்,
அத்தோடு கடன் வாங்கும் முறை மற்றும் வாங்கியவர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் போன்ற தற்காலத்திற்கு அவசியமான மிகவும் பிரயோசனமான பல கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.
அத்தோடு, “விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்” என்ற குர்ஆன் வசனத்தை சுட்டிக்காட்டி அதற்கு பல உலமாக்கள் வழங்கியுள்ள தப்ஸீருடைய பிண்ணணியில்,
விபச்சாரம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது போல,
விபச்சாரத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய காரியங்களும் மார்க்கத்தில்
தடைசெய்யப்பட்டுள்ளதை நினைவூட்டி,
ஆண் + பெண் கலப்பு சார்ந்த சூழல் சில வேளை  விபச்சாரம் போன்ற பித்னாக்களுக்கு இட்டுச் செல்லுமானால் அவ்வாறான சூழல் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளதுடன் அவற்றிற்கு மாற்றீடான பாதுகாப்பான சூழலை உருவாக்குவது பற்றி சிந்திப்பது தலைமைகளின் கடமையாகும்.
எனவே, ஆண் பெண் கலப்பு நிறைந்த கல்வி நிறுவனங்களோ!
சந்தைகளோ!
ஏனைய இடங்களாக இருப்பினும்,
அதை வழிநடத்தும் பொறுப்பு வாய்ந்தவர்கள்  அழகான திட்டமிடல்களுடன் செயற்படுவது ஆரோக்கியமானது என  கண்ணியமான முறையில் தனது ஆலோசனையை முன்வைத்தார்கள்.
மேலும், அதிகமான மக்கள் வாழ்வில் நெருக்கடியான நிலைமைகளில் சரியான உதவிகள்,வழிகாட்டல்கள் கிடைக்காமையால் வட்டியின் பக்கம் சிக்கிக் கொள்வதால்,
சமூகத்தை வட்டியை விட்டும் பாதுகாக்க சில மஸ்ஜித்கள் முன்னெடுத்து வரும்  கடன் திட்டங்களை போல
அனைத்து மஸ்ஜித்களிலும் அதன் நிர்வாகிகளும் அதிலுள்ள உலமாக்கள், கல்வியாளர்கள்,செல்வந்தர்களை இணைத்துக் கொண்டு மஸ்ஜித் ரீதியான அழகிய கடன் திட்டங்களை உருவாக்கி சமூகத்திற்கு மத்தியில் வட்டி தொடர்பான விளிப்புணர்வை ஊட்டி அழகான முன்மாதிரிமிக்க சமூகத்தை கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என உபதேசம் புரிந்தார்கள்.
அப்துல்லாஹ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s