கொழும்பு: ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிக்க கட்சியின் செற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. சற்று முன்னர் சிறிகொத்தாவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற கட்சியின் விசேட செயற்குழு கூட்டத்தின் போதே இந்த  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவே களமிறங்க வேண்டும் என கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பிரேரணையை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.