கொழும்பு: தற்போது பெய்து வரும் அடை மழை காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் 03 மணித்தியாலத்திற்கு முன்னராக வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பயணிக்களுக்கு, கட்டுநாயக்க விமான நிலைய நிர்வாகத்தினர் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளனர்.
சீரற்ற காலநிலை தொடர்கின்ற போதிலும், விமான நிலைய நடவடிக்கைகள் எவ்வித இடையூறுகளுமின்றி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கு இடைஞ்சல் ஏற்படாத வகையில், 3 மணித்தியாலத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தருமாறும் பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க பகுதியில் நேற்று (23) காலை 8.30 மணி முதல் இன்று (24) அதிகாலை 3.00 மணி வரை 272 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.