தொடர்மாடி தொடர்பால் 4மாத கர்ப்பமான பாடசாலை மாணவி-கல்முனையில் சம்பவம்

பாறுக் ஷிஹான்

தொடர்மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தகாத உறவின் காரணமாக மாணவி 4 மாதம் கர்ப்பமடைந்த சம்பவம் பெரியநீலாவணை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய நீலாவணையில் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபரான சித்தப்பா ஞாயிற்றுக்கிழமை(22)கைது செய்யப்பட்டார்.

சம்பவத்தில் கர்ப்பம் தரித்துள்ள மாணவி கடந்த காலங்களில் பெரிய நீலாவணையில் தொடர்மாடி குடியிருப்பில் வாழ்ந்துள்ளார்.

இம்மாணவி பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று தரம் 10 உடன் இடைவிலகியுள்ளார்.

மரம் வெட்டும் தொழில் செய்யும் ஏலவே திருமணம் செய்த  சந்தேக நபரான சந்திரசேகரம் வசந்தன்(வயது-23) சம்மாந்துறை  மல்வத்தை தம்பி நாயகபுரம் பகுதியை சேர்ந்தவர்.இவர் பெரிய நீலாவணை விஸ்ணு கோவில்  வீதியை சேர்ந்த தந்தையை இழந்த  சௌந்தரராஜன் பிரிந்தா (வயது-16) என்ற மாணவியுடன் தகாத உறவினை கொண்டு தலைமறைவாகி இருந்தார்.

இவ்வாறு  மாணவி  இடையிடையே மயக்கமடைந்துள்ளமையினால் தந்தையை இழந்துள்ள நிலையில்  தாயுடன் சென்று மருத்துவ பரீசோதனை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது மருத்துவ பரீசோதனையின் பின்னர் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குறித்த சம்பவம் நான்கு மாதங்களிற்கு முன்னர் இடம்பெற்ற போதிலும் தற்போது கர்ப்பம் தரித்தமையினால் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடாக வந்துள்ளமை சுட்டிக்காட்டதக்கது.

மேலும் சந்தேக நபர் தலைமறைவாக இருந்த நிலையில் மல்வத்தை தேவாலயம் ஒன்றிற்கு அருகாமையில் இன்று பொலிஸாரினால் கைதானார்.

கைதான சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் சந்தேக நபர் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயின் ஒன்றுவிட்ட தங்கையின் கணவர் என்பதும் குறிப்பிடதக்கது.

கல்முனை பொலிஸ் பிரிவில் அண்மைக்காலமாக சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக எவரும் கண்டனக்குரல் எழுப்புவதில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s