கொழும்பு: அவசர கால சட்டம் நீக்கப்பட்டுள்ள காரணத்தினால் நிகாப், புர்கா மற்றும் முகத்திரை தொடர்பான சட்டம் அமுலில் இல்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எச்.ஏ.ஹலீம் வெளியிட்ட கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக பொலிஸ் தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது.

அவசர கால சட்டம் தற்போது அமுலில் இல்லை எனவும் அதனால் நிகாப், புர்கா, முகத்திரை மற்றும் தலைகவசம் தொடர்பான சட்டம் தற்போது அமுலில் இல்லை எனவும் பொலிஸ் ஒழுக்காற்று மற்றும் சட்டப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.