கொழும்பு: மக்கள் விரும்பினால்   தேர்தலில் போட்டியிடுவேன் என இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் பதவிநீக்கம் செய்யப்பட்ட சிராணி பண்டாரநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என ஊகங்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மக்கள் என்ன விரும்புகின்றார்கள் என்பதே நான் தேர்தலில் போட்டியிடுவதை தீர்மானிக்கும்,இதுவரை நடந்தது எதுவும் திட்டமிட்டு நடந்ததில்லை மக்கள் ஆணையே முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விதி என்னை இவ்வளவு தூரத்திற்கு கொண்டுவந்துள்ளது விதி அனைத்தையும் தீர்மானிக்கும் என நான் நம்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.