கொழும்பு: ஊருபொக்கை பகுதியில் நேற்று கடத்தப்பட்ட கூட்டுறவுப் பணிப்பாளர் கொட்டாவையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் பேச்சாரள் தெரிவித்தார்.இதேவேளை கடத்தல் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இலக்கத் தகடற்ற வெள்ளைநிற வேன் ஒன்றை மீட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் சந்தேகத்தில் 3 பேரைக் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஊருபொக்க பெரலபனாத்தர பிரதேசத்தில் இலக்கத் தகடற்ற வெள்ளை வேன் ஒன்றில் வந்த நபர்களால் நேற்றையதினம் அதிகாலை 6.00 மணியளவில் சுரங்க லக்மால் எதிரிசிங்க என்ற கூட்டுறவுப் பணிப்பாளர் கடத்திச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.