கொழும்பு: “Bபெட்டிகலோ கெம்பஸ்” தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு இன்று (17) கோப் குழு முன்னிலையில் தெரிவித்தது. Bபெட்டிகலோ கெம்பஸ் தனியார் நிறுவனம் தொடர்பில் இன்று கோப் குழுவில் விசாரணை நடைபெற்றது.
இதன்போது Bபெட்டிகலோ கெம்பஸ் மற்றும் ஹிரா மன்ற ஸ்தாபகர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அவரின் புதல்வர் ஹிராஸ் ஹிஸ்புல்லா ஆகியோர் பிரசன்னமாகியிருக்கவில்லை. வெளிநாட்டு தூதுக்குழுவொன்றை சந்திப்பதற்காக வெளிநாடு செல்வதாக அவர்கள் கோப் குழுவுக்கு அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் உயர்கல்வி அமைச்சு அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழு அதிகாரிகள் இதில் பங்கேற்றார்கள் கோப் குழு கூட்டம் அதன் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தியின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போதே பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியது