கொழும்பு: ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அல்லது 23 ஆம் திகதி இடம்பெறலாமென சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அவசர சந்திப்பொன்றை இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டிருந்தார்.