350 சவூதி படையினர் ஹௌதி இஸ்லாமிய போராளிகளினால் விடுவிப்பு

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது 

 கடந்த இருதினங்களுக்குள் சவூதி அரேபியாவின் நஜ்ரான் மாகாணத்தின் யேமனை அண்டிய பிரதேசத்தில் ஹௌதி இஸ்லாமிய போராளிகளின் தாக்குதளின்போது கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட சவூதி  படையினர்களில் 350 பேர்கள் இன்று விடுவிக்கப்பட்டனர்.   ஹௌதி இயக்கத்தினரின் இந்த நடவடிக்கையானது அதிஉயர்ந்தபட்ச மனிதாபிமானமான செயலாக பார்க்கப்படுவதுடன், இது சிறந்த அரசியல் ராஜதந்திரம் என்றும் நோக்கப்படுகின்றது.   Read the rest of this entry »

இராணுவம் தேடுதல்-புதிய சோதனை சாவடிகள்

– பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்தின்  தமிழ் பேசும்  மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் புதிய நிரந்திர சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதுடன்,  சாய்ந்தமருது பகுதிகளில் இராணுவத்தினரின் குழு ஒன்று மற்றுமொரு பாரிய  தேடுதல் நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளது. திங்கட்கிழமை (30) மதியம்  மாலை திடிரென உழவு இயந்திரத்தில் வந்த சுமார் 15 க்கும்  அதிகமான  இராணுவத்தினர் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு அருகே உள்ள சவளக்கடை சந்தியில் நிரந்திர சோதனை சாவடி ஒன்றை அமைத்து சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். Read the rest of this entry »

கோட்டாபய ஜனாதிபதித் தேர்தலில் இருந்து வாபஸ் பெற நேரிடலாம்

கொழும்பு: எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ஷ சில நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து வாபஸ் பெற நேரிடலாம் என அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரித்துள்ளார்.  ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் ஆதரவு தெரிவித்து, கொலன்னாவ பகுதியில் நேற்று (29.09.2019) நடைபெற்ற கூட்டம் ஒன்றிலேயே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  Read the rest of this entry »

கோத்தாவுக்கு ஆதரவு வழங்க தாயார்: ஜனாதிபதி

குருணாகல: நாட்டுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதில் எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் சுதந்திர கட்சியின் தனித்துவத்தையும் கொள்கையையும் பாதிக்கும் வகையில் தாமரை மொட்டு சின்னத்தின் கீழ் அந்த ஆதரவை வழங்க தயார் இல்லை என்று ராஜபக்ஷக்களுக்கு தெளிவாகக் கூறிவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் Read the rest of this entry »

சவுதி மன்னரின் மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொலை

றியாத்: சவுதி அரேபிய மன்னரின் மெய்ப்பாதுகாவலர்  தனிப்பட்ட தகராறு காரணமாக அவரது நண்பரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சவுதி அரேபிய மன்னர் சல்மானின் மெய்ப்பாதுகாவலரான ஜெனரல் அப்தெல் பாகம் என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நண்பர் ஒருவரை பார்க்கசென்றவேளை எழுந்த தகராறினால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Read the rest of this entry »

சவூதி அரேபியாவின் நஜ்ரான் பிரதேசம் வீழ்ந்தது.ஏராளமான சவூதி இராணுவத்தினர்கள் சரணடைந்துள்ளனர்

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது 

சவூதி அரேபியாவின் நஜ்ரான் பிரதேசம் வீழ்ந்தது. ஏராளமான சவூதி இராணுவத்தினர்கள் சரணடைந்துள்ளனர்.  

சவூதி அரேபியாவின் நஜ்ரான் பிரதேசங்களை ஹௌதி இஸ்லாமிய படையினர்கள் கைப்பற்றி உள்ளதுடன், ஆயிரக்கணக்கான சவூதி இராணுவத்தினர்களை கைது செய்து, கனரக ஆயுதங்களையும் கைப்பற்றி உள்ளதாக ஹௌதி இயக்க பேச்சாளர் ஜெனெரல் சாரியாவை மேற்கோள்காட்டி சர்வதேச செய்திகள் கூறுகின்றன.  Read the rest of this entry »