கொழும்பு: இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் தலைப்பிறை இன்றையதினம் (31) நாட்டின் எப்பாகத்திலும் தென்படவில்லை என, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய நிகழும் ஹிஜ்ரி 1440 இஸ்லாமிய வருடத்தின் இறுதி மாதமான துல்ஹஜ் மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக உலமா சபை அறிவித்துள்ளது.