பதுளை மாவட்ட ஹாலிஎல – கலஉட பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் உள்ளடங்களாக 13 மாணவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக கூறி, அப் பாடசாலையின் விளையாட்டு மற்றும் கணித பாடங்களை கற்பித்த ஆசிரியர் (வயது 44 ) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட குறித்த ஆசிரியரை உடனடியாக பணி நீக்கம் செய்துள்ளதாக ஊவா மாகாண கல்வி செயலாளர் சந்யா அம்பன்வெல தெரிவித்தார்.