முகப்பூச்சுக்கள் – பெண்களே.. ! அவதானம்…!!!

நாட்டின் எல்லாப் பாகங்களிலும், பெரும்பாலாக பெண்களிடத்தில் சருமத்தை அழகுபடுத்துவதற்காக பயன்படுத்தப்படும் முகப்பூச்சுக்கள் (கிறீம் வகைகள்) தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது. தற்போது சந்தையில் உள்ள இவ்வாறான முகப்பூச்சுக்கள் (கிறீம் வகைகள்) குறிப்பிட்ட அளவிலும் பார்க்க ஆகக் கூடுதலான இரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளமை ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்கள் மேற்கொள்ளப்படும் சுமார் ஆயிரம் தயாரிப்புக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக சருமத்திற்கு பயன்படுத்தக்கூடிய முகப்பூச்சுக்களில் (கிறீம் வகைகள்) இருக்க வேண்டிய ஆகக் கூடிய உலோகத்தின் அளவு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக, ஒரு கிலோகிராமில் இருக்கக்கூடிய ஆகக்கூடிய இரசாயனத்தின் அளவு ஒரு மில்லிகிராம் ஆகும். இருப்பினும், மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சருமத்தை அழகுபடுத்துவதற்காக உள்ள முகப்பூச்சு வகைகளில் (கிறீம் வகைகள்) கிலோகிராம் ஒன்றில் 11 ஆயிரம் மில்லி கிராமுக்கும் மேற்பட்ட இரசாயன கலவை அடங்கியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால் அனைவரையும் சற்று அவதானத்தை கையாளுமாறு நுகர்வோர் அதிகாரசபை தகவல் வழங்கியுள்ளது. 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s