மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு வெளிநாட்டில் இருந்து நிதி முறைகேடாக கையாளப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார் பாராளுமன்ற உறுப்பினர் அதுரெலிய ரதன தேரர். நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் வெளிநாட்டு நிதி தொடர்பான சட்டம் அடிப்படைவாத செயற்பாடுகளளை ஊக்குவிக்கும் சக்திகள் பெருமளவான நிதியை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு வசதியாகவிருக்கிறது. இதற்கு ஜனாதிபதியும் , பிரதமரும் பொறுப்புக்கூறவெண்டும் என்றும் குறிப்பிட்டார் .
இராஜகிரிய – சதாஹம் செவன தேசிய பௌத்த நிலையத்தில் இன்று (27) செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்த அவர் அடிப்படை வாதத்தை இல்லாதொழிப்பதே எனது நோக்கம் என்றாலும் தான் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரானவன் அல் எனவும் இதன்போது தெரிவித்தார்.