பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் (SLFP) வகித்த பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அலகியவன்னவுக்கு குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமகே தெரிவித்தார்.
இன்று (26) மாலை ஶ்ரீ.ல.சு.கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.