உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து தமது பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்களில் ஒரு சிலர் தமது அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில் தமது பதவிகளை பொறுபேற்காமலிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் ஹாஸிம், அலிசாஹிர் மௌலானா ஆகியோர் மீண்டும் தமது பதவிகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.