கொழும்பு: இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்ற பாரிய நிதி மோசடியின் பிரதான சந்தேக நபரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதியரசர்களான சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பிக்க ஜானகி ராஜரத்ன ஆகியோரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பிடியாணை உத்தரவை ஆங்கில மொழியில் விடுப்பதற்கும் நீதியரசர்கள் நேற்று தீர்மானித்துள்ளனர்.