கொழும்பு: எதிர்வரும் ஓகஸ்ட் 12 ஆம் திகதி  இலங்கையில் ஹஜ்ஜுப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிஜ்ரி 1440 துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களில் தென்பட்டதன் காரணமாக, எதிர்வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அரபா தினத்தை அனுஷ்டிப்பது என்றும் திங்கட்கிழமை 12 ஆம் திகதி  இலங்கை வாழ் முஸ்லிம்கள் புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

‘ஈதுல் அழ்ஹா’ (ஹஜ்ஜுப் பெருநாள்) தினமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.