முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்துச் செய்யப்பட்டமைக்கான ஆவணம் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுமார் 16 வருடங்கள் அமெரிக்க குடியுரிமையை வைத்திருந்த கோத்தபாய ராஜபக்ஷ, அதனை ரத்து செய்யுமாறு இவ் ஆண்டு ஆரம்பத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.