ஹஜ்ஜுப் பெருநாள் 12 ஆம் திகதி திங்கட்கிழமை

கொழும்பு: எதிர்வரும் ஓகஸ்ட் 12 ஆம் திகதி  இலங்கையில் ஹஜ்ஜுப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிஜ்ரி 1440 துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களில் தென்பட்டதன் காரணமாக, எதிர்வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அரபா தினத்தை அனுஷ்டிப்பது என்றும் திங்கட்கிழமை 12 ஆம் திகதி  இலங்கை வாழ் முஸ்லிம்கள் புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

சுமத்ரா தீவில் பெரிய நிலநடுக்கம்: இலங்கையில் எச்சரிக்கை

இந்தோனீசியாவின் தென் மேற்கு சுமத்ரா தீவுகள் பகுதியில் பெரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  7.0 அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், 76 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வளி மண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவிக்கிறது.  Read the rest of this entry »

கோத்தாவின் அமெரிக்க குடியுரிமை இரத்து

முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்துச் செய்யப்பட்டமைக்கான ஆவணம் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read the rest of this entry »