முஹர்ரம் தலைப்பிறை தென்படவில்லை

கொழும்பு: இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் தலைப்பிறை இன்றையதினம் (31) நாட்டின் எப்பாகத்திலும் தென்படவில்லை என, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய நிகழும் ஹிஜ்ரி 1440 இஸ்லாமிய வருடத்தின் இறுதி மாதமான துல்ஹஜ் மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக உலமா சபை அறிவித்துள்ளது.

முப்பெரும் நிகழ்வுகள்

எம்.ரீ. ஹைதர் அலி

இன்று (30.08.2019) கௌரவ சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்கள் நாங்கள் விடுத்த வேண்டுகோளிற்கு இணங்க ஆரையம்பதி வைத்தியசாலைக்கும் மற்றும் மச்சந்தொடுவாய் யூனானி ஆராய்ச்சி வைத்தியசாலைக்கும் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின்போது வைத்தியசாலைகளின் குறைபாடுகள் சம்பந்தமாகவும் எதிர்கால அபிவிருத்தி சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது. மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலை தரம் உயர்த்துவது பற்றியும் ஆராயப்பட்டது.  Read the rest of this entry »

நடுவானில் திரும்பிய விமானம்: நாடுகடத்தல் இரத்து!

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழ் குடும்பத்தினை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சிகளை நீதிமன்றம் இறுதி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது. நடேஸ் பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும் விசேட விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்ட பின்னர் நீதிமன்றம் அவர்களை வெளியேற்றும் உத்தரவைபிறப்பித்தது என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. Read the rest of this entry »

“ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தேசிய பாதுகாப்பிற்கு ராணுவ முகாம்கள் அத்தியாவசியம் என்பதனை எடுத்துக்காட்டுகிறது”-ஜனாதிபதி

இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு ராணுவ முகாம்கள் அவசியம் என்பதனை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. Read the rest of this entry »

13 மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் இடைநிறுத்தம்

பதுளை மாவட்ட ஹாலிஎல – கலஉட பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் உள்ளடங்களாக 13 மாணவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக கூறி, அப் பாடசாலையின் விளையாட்டு மற்றும் கணித பாடங்களை கற்பித்த ஆசிரியர் (வயது 44 ) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.   Read the rest of this entry »

ஜனாதிபதி தேர்தலினூடாக ஹிஸ்புல்லாஹ் சாதிக்கப் போவதென்ன?

ஜனாதிபதி தேர்தல் களம் வரலாற்றில் ஒரு போதுமில்லாதவாறு சூடேற ஆரம்பித்துள்ளது. பெரிய தேசிய கட்சிகள், தங்களது வெற்றியை நோக்கி காய்களை நகர்த்துகின்றன. ஏனைய சிறிய கட்சிகளும், தனி நபர்களும் எங்கு சென்றால், எதைச் செய்தால் சாதிக்க முடியுமோ அவற்றை செய்வதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான நிலையில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க சிந்திப்பதாக ஊர்ஜிதமான சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் இதனை ஒரு புரளியாக கடந்து சென்றாலும், இனியும் அவ்வாறு கடந்து செல்ல முடியாதளவு, அச் செய்தி உறுதியாகியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சார்பாக ஒருவர் களமிறங்க வேண்டும். யாரும் முன்வராவிட்டால், தான் தயாராகவுள்ளேன் என்பதே ஹிஸ்புல்லாஹ்வின் நிலைப்பாடு. இதனை தெளிவாக விளங்கினால் தான், அவரின் இந் நிலைப்பாடு தொடர்பான விமர்சன பார்வைக்குள் நுழைய முடியும். Read the rest of this entry »