மக்கா: காத்தான்குடி ஸஹ்வான் ட்ரவல்ஸ் நிறுவணத்துடன் ( எம்முடன்) ஹஜ் கடமையை நகறைவேற்ற வந்த சகோதரி நபூரா அவர்கள் இன்று காலை மலிக் பைஸல் ஆஸ்பத்திரியில் வபாத்தானார்கள்…. இன்னாலில்லாஹ்…..

உம்றாவை சிறப்பாக நிறைவேற்றியதுடன் ஹரத்தில் பல நாள் தொழுகையையும் நிறைவேற்றியிருந்தார்.

தனக்கு சுகயீனம் என்றிருந்தும் உறுதியுடன் பணம் சேகரித்து ஹஜ்ஜுக்காக வந்திருந்தார்…. அடிக்கடி மரணத்துடன் சம்பந்தப்பட்ட பேச்சுக்களை பேசினார்… அவரது சகோதரி மச்சான் மாமி சகோதரியின் மகள் ஆகியோர் அவருடன் கூடவே இருந்தனர்.

சனிக்கிழமை வைத்தியசாலையில் வைத்துவிட்டு திரும்பும்போது எனக்கு சக்ராத் ஏற்பட்டால் யார் கலிமா சொல்லித்தருவார்கள் என கேட்டார்… நேற்று எமது ஹாஜிகள் மதீனா வந்துவிட்டனர் அவவின் மக்காவில் தங்கியிருந்தார்கள்… ஜனாஸா நல்லடக்க விடயத்தில் ஸமீம் ஹாஜியார் மக்கா சென்றுள்ளார்.

.- மின்ஹாஜ் மவ்லவி