கொழும்பு: மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் செய்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரை கலைப்பதற்காக பொலிசார் கண்ணீர்புகை பிரயோகமும் , நீர்தாரை பிரயோகமும் நடத்தினர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆரம்பமாகியது.
நுகேகொட ,கிருலப்பனை , தும்முல்ல சந்தியூடாக அலரி மாளிகைக்கு சென்றடைய ஆர்ப்பாட்டகாரர்கள் முற்பட்டனர்.
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் கோஷங்களை எழுப்பியும் , சிவப்பு நிற கொடிகளை ஏந்தியவாறும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆர்ப்பாட்டகாரர்கள் கொள்ளுப்பிட்டிய சந்தியை சென்றடைந்த போது அந்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டகாரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.