புர்கா ஆடைகளுக்கு நிரந்தரத் தடை

முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா ஆடைகளை  நிரந்தரமாக தடை செய்யக் கோரும் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள இதற்கான பத்திரத்தைக் இன்று (செவ்வாய்க்கிழமை) கையளித்துள்ள நிலையில், அடுத்த கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read the rest of this entry »

“சமல் ராஜபக்சவை வேட்பாளராகக் களமிறக்கினால் வெற்றி உறுதியாகும்”

“மக்கள் செல்வாக்குப் பெருமளவில் இல்லாத கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப்  போட்டியிட வைத்தால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குத் தோல்வியே ஏற்படும். எனவே, ராஜபக்ச குடும்பத்தில் குற்றச்சாட்டுக்கள் எதுவும் சாட்டப்படாத சமல் ராஜபக்சவை வேட்பாளராகக் களமிறக்கினால் வெற்றி உறுதியாகும்.” என இன்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் தான் நேரில் எடுத்துரைத்துள்ளதாகப் பொது எதிரணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான வாசுதேவ நாணயக்கார எம்.பி. தெரிவித்தார். Read the rest of this entry »

மந்திரி பதவியை மீண்டும் பொறுப்பேற்றதற்காக கட்சி போராளிகள் ஏன் தலைவரை விமர்சித்தார்கள் ?

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது

தலைவர் அமைச்சு பொறுப்பை மீண்டும் ஏற்றதனால் அதன் மூலம் சில சலுகைகளை அனுபவிக்கும் பொருட்டு நாங்களும் தலைவரை பாராட்டி இருக்கலாம். அல்லது குறைந்தது எதுவும் பேசாமல் இருந்திருக்கலாம். இதனைத்தான் பலர் செய்து பிழைப்பு நடத்துகிறார்கள்.  

ஆனால் எங்கள் தலைவர் நெல்சன் மண்டேலா, அல்லது குறைந்த பட்சம்அஸ்ரபாக இருக்க வேண்டும் என்றே எதிர்பார்கின்றோம்  Read the rest of this entry »

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பு

– பாறுக் ஷிஹான்  

சம்பள உயர்வு கோரி அடையாள பணிப்பகிஸ்கரிப்பை தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை (30)மேற்கொண்டனர். இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்து தொழிற்சங்கங்கள் ஏற்கனவே தீர்மானத்தின் பிரகாரம் உயர் கல்வி அமைச்சிற்க்கும் அரசாங்கத்திற்கும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம் அவை நிறைவேற்றப்படாமல் தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது தொடர்ந்து தங்களது ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று ஒரு நாள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை பல்கலைக்கழகங்களின் ஊழியர்கள் முன்னெடுத்தனர். Read the rest of this entry »

ஓரினச்சேர்க்கை: 6 மாதங்களில் 6 HIV நோயாளர்கள்

இந்த வருடத்தின் முதல் 06 மாத காலப்பகுதியில் எச்.ஐ.வி. நோயாளர்கள் 06 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக, மஹாமோதர வைத்தியசாலையின் பால்வினை நோய்கள் சம்பந்தமான கட்டுப்பாட்டுப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தர்ஷனி விஜேவிக்கிரம தெரிவித்தார். அவர்கள் அனைவரும் ஆண்கள் எனவும் அவர் தெரிவித்தார். Read the rest of this entry »

ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக போராட்டம் : ரத்ன தேரர்

மீண்டும் அமைச்சு பதவியினை  பொறுப்பேற்றுள்ள  அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக அஹிம்சை வழியிலான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதுடன்ஜனாதிபதி உட்பட அரசாங்கம் விரைவாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என  பாராளுமன்ற உறுப்பினர்  அத்துரலியே  ரத்ன தேரர் தெரிவித்தார். ராஜகிரியவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம் பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். Read the rest of this entry »