முஸ்லீம் சமூகம் முன்னெடுக்கவுள்ள போராட்டம்

– பாறுக் ஷிஹான்

கல்முனை: நாளை (20) கல்முனை மாநகரில் உள்ள பொதுஇடம் ஒன்றில் காலை குறித்த சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே வேளை கல்முனை மாநகர வளாகத்தில் முக்கிய உறுப்பினர்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் வர்த்தக சமூகத்தினரின் பங்குபற்றலுடன் இன்று மாலை நடைபெற்று முடிந்த முக்கிய கூட்டம் ஒன்றில் தற்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரும் சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்ம் தொடர்பாக முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

போராட்டம் என்பது தமிழ் இனத்திற்குப் புதிதான விடயமல்ல: வியாளேந்திரன்

தமிழ் இனத்திற்குப் போராட்டம் என்பது புதிதான விடயமல்ல என்பதனையும் இவ்விடத்தில் நான் கூறிவைக்க விரும்புகின்றேன். கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் ஒன்றிணையுமாறு கோரிக்கை விடுப்பதாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த கோரி பிரதேச செயலகம் முன்பாக  சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகின்றது இந்நிலையில் இன்று உண்ணாவிதரத்தில்  ஈடுபட்டுள்ளவர்களைப் பார்வையிடச் சென்று அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நள்ளிரவில் ரயர் எரித்தவர்களை தேடி இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கை- ஹர்த்தாலுக்கும் அழைப்பு

– பாறுக் ஷிஹான்

கல்முனை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நள்ளிரவில் ரயர் எரித்தவர்களை தேடி இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று (19) காலை நற்பிட்டிமுனை சந்தி கிட்டங்கி வீதி உள்ளடங்களாக பொதுக்கட்டடங்கள் தனியார் கல்வி நிலையங்கள் கடைகளில் குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read the rest of this entry »