எகிப்திய வரலாற்றில் ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி முகம்மது முர்சி அவர்களின் மரண செய்தி உலக இஸ்லாமியர்களை கவலை அடைய செய்துள்ளது.  அமெரிக்காவின் ஆதரவுடன் முப்பது வருடங்களாக சர்வாதிகார ஆட்சி செய்துவந்த ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சியை யாராலும் அசைக்கமுடியாது என்ற நிலைமை அப்போது இருந்தது.  

மத்தியகிழக்கில் அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடன் நீண்ட காலங்களாக சர்வாதிகார ஆட்சி நடாத்திவந்த நாடுகளில் அரபு வசந்தம் என்ற பெயரில் மக்கள் புரட்சி ஏற்பட்டது. 

இந்த புரட்சியானது 21 இறுதியில் துணீசியா நாட்டில் ஆரம்பித்தது. பின்பு 211 இல் எகிப்தில் புரட்சி வெடித்தது. இப்புரட்சியின் மூலம் முப்பது வருடகால ஹோஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்டது. 

எகிப்தின் வரலாற்றில் முதன் முறையாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடாத்தப்பட்டு மக்கள் தெரிவின் அடிப்படையில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை சேர்ந்த முகம்மத் முர்சி அவர்கள் எகிப்தின் ஜனாதிபதியாக தெரிவானார். 

ஆனாலும் அவர் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ முட்பட்டதனாலும், அமெரிக்காவுக்கு கட்டுப்படாததனாலும் தொடர்ந்து ஆட்சி செய்வதற்கு இராணுவத்தினர்கள் ஒத்துழைக்கவில்லை. அதனால் 213 ஜூலை மாதம் இராணுவத்தினர்களின் சதி முயற்சியினால் ஒரு வருடத்தில் முகமத் முர்சியின் ஆட்சி அகற்றப்பட்டது. இதன் பின்னணியில் அமெரிக்கா இருந்தது.  

இதன்போது ஏற்பட்ட வன்முறையில் முஸ்லிம் சகோரத்துவ அமைப்பை சேர்ந்த பலர் எகிப்து இரானுவத்தினரினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  

பின்பு பலவித குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு ஜனாதிபதி முகம்மத் முர்சி அவர்களும், அவரது முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் முன்னணி உறுப்பினர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டதுடன், இவர்கள்மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.  

எகிப்தின் மிகப்பெரிய இஸ்லாமிய அமைப்பான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு உலகெங்கிலும் மிகவும் செல்வாக்கான அமைப்பாக காணப்படுவதுடன் இது 1928 இல் ஹசனுள் பன்னாவினால் நிறுவப்பட்டது.

இவ்வமைப்பு எகிப்திய மக்களின் மனங்களில் ஆழ பதியப்பட்டதனால் அம்மக்களிடமிருந்து இவ்வமைப்பை பிரிக்க முடியவில்லை. அதனால் அமெரிக்க கைபொம்மையான எகிப்திய இன்றைய அரசு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை ஓர் பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அதனை தடை செய்தது. 

அத்துடன் அதன் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதுடன், சொத்துக்கள் மற்றும் முகம்மத் முர்சி உட்பட அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் சுமார் 15௦௦ க்கு மேற்பட்டவர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.      

இந்த அராஜக செயல் அனைத்துக்கும் இன்றைய எகிப்து அரசின் கைபொம்மையாக அந்நாட்டு நீதிமன்றமும் இராணுவமும் செயல்பட்டு வருகின்றது. 

இத்தனை கெடுபிடிகளுக்கு மத்தியிலும் முஸ்லிம் சகோரத்துவ அமைப்பு தொடர்ந்தும் தனது செயல்பாடுகளை எகிப்திலும் அதற்கு வெளியேயும் செயல்பட்டு வருகின்ற வேளையில் முகம்மத் முர்சி அவர்களின் மரணம் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளது

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது