காத்தான்குடி வரவேற்பு வளைவில் உள்ள அரபு மொழி சொற்களை அகற்றுவது குறித்து தீர்மானம்!

மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழ் மொழியினை முன்னுரிமைப்படுத்தல் மற்றும் அரபு மொழிச் சொற்களை அகற்றுதல் தொடர்பான பல்வேறு பிரேரணைகள் மட்டக்களப்பு மாநகர சபையின் 20 ஆவது பொது அமர்வின் போது நிற‍ைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையின் 20 ஆவது பொது அமர்வு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.

இந்த அமர்வில், மாநகர எல்லைக்குட்பட்ட பதாதைகளில் தமிழ் மொழியினை முன்னுரிமைப்படுத்தல் மற்றும் காத்தான்குடி வரவேற்பு வளைவில் உள்ள அரபு மொழிச் சொற்களை அகற்றுதல் தொடர்பான பல்வேறு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த அமர்வு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றதுடன் இதில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர உதவி ஆணையாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, மாநகரசபை உறுப்பினர் தவராஜாவால் தமிழ்மொழி அமுலாக்கல் தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டது. வியாபார நிலையங்களின் பதாதைகளில் தமிழ்மொழி பிரதானப்படுத்துவது தொடர்பாக வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துவதுடன், அரச அலுவலகங்களின் பிரதானிகளுக்கும் நிறைவேற்றப்படுகின்ற பிரேரணை குறித்து அறிக்கை சமர்ப்பிப்பதாக மாநகர முதல்வர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து காத்தான்குடி மட்டக்களப்பு எல்லையில் அமைக்கப்பட்ட வரவேற்பு வளைவில் உள்ள அரபு மொழி அகற்றப்படுவது குறித்து தமது அறிக்கையினை முன்வைப்பதுடன் பிரதமரின் சுற்றுநிரூபத்தை அடிப்படையாகக் கொண்டு காத்தான்குடி நகர சபைக்கு அறிக்கை அனுப்புவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s