இலங்கை தேசிய புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி சிசிர மெண்டீஸ் பதவி விலகல்

sisira mendisகொழும்பு: தேசிய புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சிசிர மெண்டீஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சிசிர மெண்டீஸ் தனது ராஜினாமா கடிதத்தை தன்னிடம் கையளித்ததாக பாதுகாப்பு செயலாளர் ஷாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார். உடல்நல குறைவு என்ற காரணத்தை முன்னிலைப்படுத்தி சிசிர மெண்டீஸ் ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read the rest of this entry »

காத்தான்குடி வரவேற்பு வளைவில் உள்ள அரபு மொழி சொற்களை அகற்றுவது குறித்து தீர்மானம்!

மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழ் மொழியினை முன்னுரிமைப்படுத்தல் மற்றும் அரபு மொழிச் சொற்களை அகற்றுதல் தொடர்பான பல்வேறு பிரேரணைகள் மட்டக்களப்பு மாநகர சபையின் 20 ஆவது பொது அமர்வின் போது நிற‍ைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையின் 20 ஆவது பொது அமர்வு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. Read the rest of this entry »

பிரச்சினைகளுக்கு தீர்வின்றி அமைச்சு பதவிகளை பாரமெடுக்கலாமா ? இதனால் நண்மை அடைபவர்கள் யார் ?

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது 

 நாங்கள் பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டபோது கட்டியிருக்கும் கோவணத்தை உருவி எடுக்க முயற்சிக்கின்றார்கள். எங்களுக்கு பட்டுவேட்டியும் வேண்டாம், காஞ்சிபுரம் சாரியும் வேண்டாம். இருக்கின்ற கோவணத்தை உருவ விடாது பாதுகாப்போம்.   அபிவிருத்தி என்ற போர்வையில் உயர்ந்த கோபுரத்தை அமைக்கின்றோம். ஆனால் அக்கோபுரத்தின் அத்திவாரம் இனவாதிகளினால் உடைக்கப்படுகின்றது. அதாவது ஆடம்பரத்தை நோக்கி செல்லுகையில், எங்களது அடிப்படை அரசியல் உரிமை மறுக்கப்படுவதோடு, பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றது.   Read the rest of this entry »