ஆளுநர்களான எம். எல். . ஹிஸ்புல்லா, அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோரை பதவியில் இருந்து நீக்குமாறு கோரி நேற்று (03) திகதி திருகோணமலையில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. திருகோணமலை மக்கள் என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்த மூன்று பேரையும் பதவியில் இருந்து நீக்குமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்று கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.. ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோர் பதவியில் இருந்து விலகியுள்ளதையடுத்து திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக வெடி கொளுத்தி மக்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.