மேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸம்மில் நியமனம்

மேல் மாகாணத்திற்கான புதிய ஆளுநராக .ஜே.எம்.முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.

சாஹ்ரானுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் தொடர்பு- பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா சஹ்ரானுடன்  நெருக்கிய  தொடர்புகளை வைத்துள்ளார் எனக் கூறி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று (04) முறைப்பாடு ஒன்று செய்யப் பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டினை ஈரோஸ் இயக்கத்தின்  தலைவர் ஆர் .பிரபாகரன் இன்று காலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளார்  Read the rest of this entry »

“ரிஷாத் , அசாத்சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பதவி விலகியமை பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தராது”

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளுநர்களான   அசாத்சாலிஹிஸ்புல்லா ஆகியோர் பதவி விலகியமை பிரச்சினைகளுக்கு  தீர்வை பெற்றுத்தராது என  பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர்   கலகொட அத்தே  ஞானசார தேரர் தெரிவித்தார். ஏப்ரல் 21ம் திகதி  அடிப்படைவாதிகளினால்  நடத்தப்பட்ட  தாக்குதலை தொடர்ந்து   இனங்களுக்கிடையிலான  தேசிய  நல்லிணக்கமே  சீர்குலைந்துள்ளது. Read the rest of this entry »

முஸ்லிம் அமைச்சர்களின் ராஜினாமால் வியாளேந்திரன் அடைந்த நண்மை என்ன ? இதனை தமிழ் மக்கள் புரிந்துகொள்வார்களா ?  

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது 

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு வியாலேந்திரனின் அரசியல் நடவடிக்கைகள் மிகவும் கவலை தருகின்றது. ஒற்றுமையாக இருக்கின்ற தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் பகைமை உணர்வினை ஏற்படுத்தி அதில் அரசியல் இலாபம் அடைய முற்படுவதனை காணக்கூடியதாக உள்ளது.   தமிழர்களின் அரசியல் பிரதிநிதியான தமிழ் தேசிய கூட்டமைப்பு கொள்கையினால் கட்டியமைக்கப்பட்டது. அக்கட்சியில் உள்ளவர்கள் ஒருபோதும் அற்ப சலுகைக்காக அதாவது பணத்துக்காகவும், பதவிக்காகவும், அதிகாரத்திற்காகவும் சோரம்போனதில்லை. அவ்வாறு சோரம்போனவர்கள் மிகவும் அரிது  Read the rest of this entry »

திருமலையில் மகிழ்ச்சி கொண்டாட்டம்

ஆளுநர்களான எம். எல். . ஹிஸ்புல்லா, அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோரை பதவியில் இருந்து நீக்குமாறு கோரி நேற்று (03) திகதி திருகோணமலையில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. திருகோணமலை மக்கள் என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்த மூன்று பேரையும் பதவியில் இருந்து நீக்குமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்று கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.. ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோர் பதவியில் இருந்து விலகியுள்ளதையடுத்து திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக வெடி கொளுத்தி மக்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.