ஏனைய முஸ்லிம்கள் குறித்த தெளிவை ஜம்மிய்யதுல் உலமாவே வழங்க வேண்டும்!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

அங்கீகாரம் பெற்றுள்ள முஸ்லிம்களின் சமயத் தலைமை எனும் வகையில் இது அவர்கள் மீதுள்ள அதிகாரபூர்வமான வரலாற்று கடமையாகும்! ஆரவாரங்கள் விளம்பரங்கள் இன்றி அமைதியாகஎமது சன்மார்க்கக் கடமைகளை பணிகளைவழமைபோல் நாம் முன்னெடுப்போம், இன்ஷாஅல்லாஹ்!

இஸ்லாமிய அமைப்புக்கள்,  இஸ்லாமியகலாபீடங்கள் மற்றும் அரசார்பற்ற நிறுவனங்கள்தத்தமது பணிகளை வழமைபோல்முன்னெடுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை, அனாவசியமான அச்சம் தயக்கமின்றி அவற்றைநாம் முன்னெடுக்கும் அதேவேளை எமது கடந்தகால செயற்பாடுகளை ஒருமுறை மீள்பார்வைசெய்துகொண்டு கற்றுக் கொண்ட பாடங்களில்இருந்து படிப்பினைகளை உள்வாங்கி நாம் முன்செல்வோம்! இன்ஷா அல்லாஹ்.

ஒவ்வொரு இஸ்லாமிய நிறுவனமும் தமதுநிறுவனம், செயற்பாடுகள் பற்றிய அறிமுகத்தைதேவைப் படும் போது உரிய தரப்புக்களிற்குஅவற்றை வழங்குவதற்கு மூன்று மொழிகளிலும்உரிய சட்ட அலோசனைகளையும் பெற்றுதயாராக வைத்திருக்க வேண்டும்.

இனமதவெறி அமைப்புகள், பரப்புரை செய்யும்ஊடகங்கள் அவற்றைப் பின்னல் இருந்துஇயக்கும் அரசியல் கட்சிகள் அவர்களது தேர்தல்வியூகங்கள் அவர்கள் தொடுத்துள்ள உளவியல்போர் என்பவற்றால் நாம் பதிப்படைவதும்சளைத்துவிடுவதும் தான் அவர்களதுஎதிர்பார்ப்பாகும்! அத்தகைய பருவகாலசலசலப்புக்களை நாம் மனத்திடத்துடன் கடந்துசெல்ல வேண்டும்.

அரசாங்கம் அவ்வப்பொழுது அறிமுகம் செய்கிறசட்டதிட்டங்களை கவனத்தில் கொண்டு நாம்செயற்படுவதோடு எமது சமூகத் தலைமைகளின்அறிவுறுத்தல்களை மற்றும் ஆலோசனைகளையும்அவ்வப்பொழுது பெற்றுக் கொண்டு நிதானமாகமுன்னோக்கியே பயணிக்க வேண்டும்.

இன்ஷா அல்லாஹ், முஸ்லிம் சமய கலாசாரஅமைச்சு, முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்றஉறுப்பினர்கள், சிவில் சன்மார்க்க தலைமகள்அவ்வப்போது அரச அறிவுறுத்தல்கள் குறித்துசமூகத்தை அறிவுறுத்துவார்கள்.

ரமழான் விடுமுறையின் பின் உரிய காலத்தில் அறபுக் கல்லூரிகள் இயங்க வேண்டும், அரச அறிவுறுத்தல்கள் வரும் போது கவனம் செலுத்தலாம்.

 

மதரஸா மாணவர்கள் தமது சீருடயைகல்லூரிகளில் அணிந்து கொள்ளலாம்,முன்னையகாலத்தில் போல் தேசிய ஆடையை ஒத்த அரைஜுப்பாவும் தொப்பியும் சிறந்த சீருடை.

இன்ஷா அல்லாஹ், ஈதுல் பித்ரை ஆரவாரமின்றிநல்லறங்களோடு வரவேற்போம், ஒரு பட்டாசுதானும் வேண்டாம், ஒலிபெருக்கியை அளவோடுபாவிப்போம்!

தனிப்பட்ட வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் எமக்கு சோதனைகள் வருவது இயல்பு, அவற்றிற்கு முறையாக முகம் கொடுப்பதே வாழ்க்கை, நாம் சோதிக்கப் படுவதற்காகவே படைக்கப் பட்டுள்ளோம்.

உடனடி காரண காரியங்கள், காரண கர்த்தாக்களுக்கு அப்பால் இந்த புனிதமிகு மாதத்தில் இந்த உம்மத்து சோதனைகளால் புடம் போடப்படுகிறது!

இது எமது நாடு என்ற தேசப்பற்றுடன் ஏனைய சமூகங்களுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாது இந்த நாட்டின் ஆள்புல ஒருமைப் பாட்டிற்கும், அமைதி சமாதானத்திற்கும், பொருளாதார சுபீட்சத்திற்கும் நாம் பங்களிப்புச் செய்து வருகின்றோம், அந்த வகையில்  இந்தநாட்டையும் மக்களையும் சர்வதேச, பிராந்திய சதிகாரர்களினது சதிவலைகளில் இருந்தும் சூழ்சிகளில் இருந்தும் அவர்களது முகவர்கள், கூலிப் படைகளின் கெடுபிடிகளில் இருந்தும் பாதுகாக்குமாறும் அறியாமையால் நெறி தவறுவோருக்கு நேரிய வழி வேண்டி பிரார்த்திக்கவும் வேண்டும்!

எல்லா நிலையிலும் எமது நம்பிக்கைக் கோட்பாடுகளை விசுவாசத்தை சன்மார்க்க தனித்துவங்களைப் பேணி முஸ்லிம் அல்லாத சமூகங்களுடன் நல்லுறவை பேணுவதும் மிகச் சிறிய தீய சக்திகளின் கெடுபிடிகளில் இருந்து அவர்களையும் காப்பற்றுவதற்கு மிகவும் தெளிவான நிலைப்பாடுகளை நாம் கொண்டிருத்தல் வேண்டும்.

 மாமூல் வாழ்வில் ஸ்தம்பிதம் வேண்டாம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s