மட்டக்களப்பு பல்கலை தொடர்பிலான குற்றச்சாட்டுக்கான பதில்

ஷரியா பல்கலைக்கழகம் அமைவதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான் அனுமதி வழங்க மாட்டேன் என்று கூறியுள்ளார். உண்மையில் இலங்கை பல்கலைக்கழக ஆணைக்குழுக்கள் சட்டத்தின் பிரகாரம் அரச பல்கலைக்கழகங்களைத் தவிர வேறு உள்நாட்டு கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழகம் என்ற பெயரால் அழைக்க முடியாது. உயர்கல்வி அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட கல்விநிறுவனம் என்றுதான் அதனைக் கூறமுடியும் என ஊடக அறிக்கை விட்டுள்ள ஒரு தனியார் கல்வி நிலையத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும், அமைச்சர் மனோகணேசனின் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளருமான சகோதரர் விநாயகமூர்த்தி ஜனகன் அவர்கள் இந்த அறிக்கையின் மூலம் பல மாங்காய்களை பறிக்க திட்டமிட்டுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. 

மட்டக்களப்பு கல்வி நிறுவனத்தை சுற்றுலாத்துறைக்கான கல்லூரியாக மாற்றுவதன் மூலம் குறித்த கல்லூரியை சுற்றுலாத்துறைக்கான கேந்திர மத்திய நிலையமாக மாற்றலாமென ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி ஜனகன் தெரிவித்துள்ளதானது அவரது  அரசியல் அஜந்தாவின் முதல்பக்கத்தை தெளிவாக காட்டியுள்ளது. 

இங்கு மட்டக்களப்பு கம்பஸ் எனப்படும் தனியார் கல்வி நிறுவனம் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்ட ஒரு கல்வி நிறுவனம். இந்த ஆணைக்குழுவில் நாடுபூராகவும் 600 இற்கு மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த நிறுவனத்திற்கான பதிவு செய்யப்பட்ட காலமும் காலாவதியுள்ளதாக தெரியவருகிறது. என தனது அறிக்கையில் தெரிவித்துள்ள சகோதரர் விநாயகமூர்த்தி ஜனகன் தான் ஒரு தனியார் கல்வி நிலையத்தின் முகாமைத்து பணிப்பாளர் என்பதையும், அது காலாவதியானால் அதனை புதுப்பிக்க பல வழிமுறைகள் உள்ளத்தையும் அறியாமல் இருப்பது எவ்வளவு வேடிக்கையான ஒரு விடயம். 

குறித்த கல்வி நிறுவனம் உயர்கல்வி அமைச்சின் பதிவுக்குட்படுத்தப்படும் என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அதாவது உயர்கல்வி அமைச்சில் பதிவு செய்யப்பட்ட ஒரு கல்வி நிறுவனமாக மாற்றப்படும். இதனால் இந்த நிறுவனம் ஏதாவது தவறான எண்ணத்துடன் வெளிநாட்டு முதலீடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தால் அதற்கான பாதையை இந்த அரசாங்கமே அங்கீகாரத்துடன் வழங்குவதற்கு ஒப்பானது.என தெரிவித்துள்ள அவர் தனது கல்விநிலையத்தையும் அப்படி தான் அவர் இயக்கிக் கொண்டுள்ளாரா என சந்தேகிக்க தோன்றுகிறது. அரசியல் ஆதாயத்தையும் தாண்டி தனது கல்வி நிலையத்துக்கு வியாபார ரீதியாக பாரிய தாக்கம் காத்திருக்கிறது என்பதால் தான் இந்த அறிக்கை என்பதை பாலகர்களும்  நன்றாக அறிவார்கள். 

 இவ்வாறு உயர்கல்வி அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட பல கல்வி நிறுவனங்கள் எவ்வாறான கற்கைநெறிகளை வழங்குகின்றது என்பதனை நடைமுறையில் கண்காணிப்பதற்கு உயர்கல்வி அமைச்சில் எந்த பொறிமுறையும் இல்லை.அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட கற்கைநெறிகளை மாத்திரமே கண்காணித்து நெறிப்படுத்துவார்கள். ஆனால் அவ்வாறு உயர்கல்வி அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட கல்வி நிறுவனங்கள் அந்த அங்கீகாரத்துடன் வெளிநாட்டு கற்கைநெறிகளையும் தங்களுடைய வேறு கற்கைநெறிகளையும் வழங்க முடியும். இது இலங்கையில் இன்று பல நிறுவனங்களில் நடைபெற்று வருகின்றது.என தெரிவித்துள்ள சகோதரர் விநாயகமூர்த்தி ஜனகன் அவர்கள் இரும்பினால் போடப்பட்ட சட்டம் போல பேசிக்கொண்டிருப்பதை காண கிடைக்கிறது. மக்களுக்காகவே சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள் இல்லை என்பதை சட்டத்தரணியாக உள்ள சகோதரர் விநாயகமூர்த்தி ஜனகன் அவர்கள் நன்றாக அறிவார். கற்கைநெறிகளை கண்காணிப்பதற்கு உயர்கல்வி அமைச்சில் எந்த பொறிமுறையும் இல்லை என தெரிவித்துள்ள அவர் ஏன் அதனை உருவாக்குமாறு குறித்த அமைச்சை கோரவில்லை. தங்களுடைய கல்விநிலையத்தில் நடப்பது போன்றுதான் எல்லோரும் இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது முட்டாள் தனமாக இல்லையா? 

இந்த நிறுவனத்தின் முதலீட்டின் உண்மையான நோக்கம் அறியாது இதற்கு உயர்கல்வி அமைச்சில் பதிவு செய்யக்கூடிய அனுமதி கிடைத்தால் நிச்சயமாக இதனைப் பயன்படுத்தி அவர்கள் என்ன திட்டமிட்டு உள்ளார்களோ அதனை சிறப்பாக செய்யமுடியும் என்பதே உண்மை. என தெரிவித்துள்ள அவர் ஊடகங்களில் கிழக்கு ஆளுநர் எம்.எல்.எம்..ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இந்த பல்கலைக்கழத்தின் நோக்கங்கள்,இலக்குகள் என்வன பற்றி பலதடவைகள் தெளிவாக விளக்கம் தந்துள்ளார் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 

ஏழை மக்களின் பணத்தை உறிஞ்சும் உங்களை போன்ற கல்வி நிறுவனங்களின்  சேட்டைகளில் இருந்து இந்த நாட்டு தமிழ்,முஸ்லிம்,சிங்கள,கிறிஸ்தவ மாணவர்கள் பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஒரு கல்விநிலையமே இது. இந்த நிறுவனத்தின் முதலீடுதொடர்பாக ஒரு சந்தேகம் இருப்பதால் இதனை ஒரு தனியார் நிறுவனமாக இயங்குவதை முற்றுமுழுதாக தவிர்க்க வேண்டும். என கூறியிருக்கும் நீங்கள் உங்கள் கல்விநிலையத்தின் முதலீடுகள் பற்றி தெளிவுபடுத்தி உள்ளீர்களா? என்று கேட்க விரும்புகிறேன்.அது மட்டுமல்லாமல் கிழக்கில் ஏற்கனவே இரண்டு அரச பல்கலைக் கழகங்கள் உள்ளன. அதிலும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் முஸ்லிம் மக்களுக்காக பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ளது. இது மற்ற இனங்களுக்கு இல்லாத ஒரு வரப்பிரசாதம். இதனை முஸ்லிம் இனத் தலைவர்கள் சரிவர செய்துள்ளார்கள் என்பதே உண்மை என்று முழுப்பூசணியை நாறின சோற்றில் புதைக்க நீங்கள் எடுத்த முயற்சி எடுபடவில்லை. யாழ் பல்கலைக்கழகம்,கிழக்கு பல்கலைக்களம் பற்றி நான் பேசித்தான் தெரியவேண்டியதில்லை என நம்புகிறேன். 

தென்கிழக்கு பல்கலைகழகத்தில் முஸ்லிம் மாணவர்கள் மட்டுமா படிக்கிறார்கள் ? அது முஸ்லிம் பல்கலைகழகம்  என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் தூக்கத்தில் இருந்து எழுந்து அந்த தென்கிழக்கு பல்கலை கழகத்தை நேரடியாக சென்று பார்த்துவிட்டு அறிக்கை விடுமாறு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.  இதற்காக நிதி வழங்கிய கொடைவள்ளள் அல்லது வள்ளல்கள் சுற்றுலாத்துறை நிலையமாக மாற்றியமைத்தால் மகிழ்சியடைவார்கள். ஒரு கல்வி நிறுவனத்தினை மையப்படுத்தி இனங்களுக்கிடையில் உருவாகக் கூடிய நம்பிக்கையீனமும் தடுக்கப்படும் என கூறியுள்ள நீங்கள் உங்கள் கல்விநிலைய வளர்ச்சிக்கு மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை ஊறுகாயாக மாற்ற எத்தனிக்கிறீர்கள் என்பது தெளிவாக தெரிகிறது. 

நாடு பூராகவும் வியாபித்திருக்கும் தங்களின் கல்விநிலைய பொருளாதாரம் பாரிய சிக்கலை சந்திக்க நேரிடும் என்ற பயத்தினாலும் தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் தமிழ் மக்களிடம் தன்னை தமிழ் இன உணர்வாளராகவும் காட்ட வேண்டிய பொறுப்பு இருப்பதாலும் நீங்கள் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை ஏதோ ஒரு பெரிய பூதத்தை போல தமிழ் சகோதர்களிடம் காட்ட முனைவதில் இருந்து உங்கள் அஜந்தாக்களை தமிழ் புத்திஜீவிகள் நன்றாக அறிந்திருப்பார்கள் என்ற உண்மையை உங்களுக்கு தெரிவித்து வைக்க விரும்புகிறேன். 

அல்ஹாஜ் நூருல் ஹுதா உமர் 
தவிசாளர், 
அல்மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s