தமது மதம் சாராத ஏனையவர்களை அழிக்க வேண்டும் என்ற அடிப்படை கொள்கையில் செயற்படும் 30 முதல் 40 ஆயிரம் முஸ்லிம்கள் இந்த நாட்டுக்குள் உள்ளனர். இன்று இவர்களின் மூலமாக அச்சுறுத்தல் இல்லாது போனாலும் எதிர்காலத்தில் அச்சுறுத்தல் உள்ளது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க சபையில் தெரிவித்தார்.
மக்கள் விரும்பாவிட்டாலும் கூட தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவசரகால சட்டத்தை ஏற்றுத்தான் ஆகவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அவசரகால சட்டத்தை நீட்டிக்கும் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையர் என்ற உணர்வு இல்லாத அராபிய கொள்கையில் உள்ளவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தவிர்த்து இலங்கையில் முஸ்லிம்களாக அதேபோல் ஏனைய மத இனத்தவரை அங்கீகரித்து அவர்களுடன் அமைதியா வாழும் முஸ்லிம்களும் உள்ளனர்.
இவ்வாறு ஐந்து பிரதான பிரிவாக உள்ளனர். இவர்களை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். இதில் அச்சுறுத்தலான பிரிவுகளை இல்லாதொழிக்க வேண்டும். இன்று அச்சுறுத்தல் இல்லாதுபோனாலும் கூட எதிர்காலத்தில் அச்சுறுத்தல் ஏற்படலாம். இந்த நாட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும். இதில் சகல தரப்பும் இணைந்து செயற்பட எனவும் தெரிவித்தார்.