கொழும்பு: அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்துள்ள எதிரணியினர் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவின் குற்றங்களை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன அலரிமளிகையில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அத்துடன் ஹிஹ்புல்லாஹ் தொடர்பான அனைத்து விபரங்களும் எம்மிடம் உள்ளது. தேவையான சந்தர்ப்பத்தில் முழு விபரங்களையும் பகிரங்கப்படுத்துவோம். குற்றவாளிகள் எவரும் சட்டத்திலிருந்து தப்பிப்பதற்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.