இலங்கையில் அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது சரத்திற்கு அமைய ஜனாதிபதி வசம் காணப்படுகின்ற அதிகாரத்திற்கு அமைய இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானியின் படி, நாடு முழுவதும் அவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி அவசர காலச் சட்டத்தை அமல்படுத்த நாடாளுமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இதன்படி, இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து, இலங்கையில் அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நீக்கப்பட்டது.