தற்போதய அமைதியற்ற சூழலை கருத்திற்கொண்டு, இலங்கையில் மீண்டும் சமூக வலைத்தளங்கள், செயலிகள் மீது தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைக்கு அமைய, சமூக வலைத்தளங்கள் மூலம் போலியானதும், தேவையற்ற தகவல்கள் பரவுவதன் மூலம் எழும் பிரச்சினைகளை தடுக்கும் வகையில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.