பௌத்த தீவிரவாதிகளால் தீக்கிரையாக்கப்படும் முஸ்லிம்களின் உடமைகள்: ஒருவர் உயிரிழப்பு

  • AK-79

riotகொழும்பு: ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நேரம். பாதுகாப்புப்படையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நேரம்… ஆம் கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் பௌத்த தீவிரவாதிகள் கடைப்பிடிக்கும் கோழைத்தனத்தின் பொறுக்கித்தனம்.

முஸ்லிம்களின் உடமைகளைக் கொள்ளையடித்தல், பணம் உட்பட பெறுமதியான பொருட்களை சூரையாடுதல், பள்ளிவாயல் கண்ணாடிகளை உடைத்தல், அல்குர்ஆனை எரித்தல், வாகனங்களுக்குத் தீ வைத்தல்… இவ்வாறு பௌத்த தீவிரவாதம் இலங்கையில் விரிவடைந்திருக்கிறது.
Read the rest of this entry »

தனியார் கல்வி நிலையங்களின் பாதுகாப்பு தொடர்பாக கல்முனை மாநகர சபையில் அவசர கூட்டம்

அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை: கல்முனை மாநகர சபையின் ஆள்புல எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பிலான அவசர கலந்துரையாடல் ஒன்று, இன்று திங்கட்கிழமை கல்முனை மாநகர சபையின் முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது. கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.வாஹித் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளும் தனியார் கல்வி நிலையங்களின் பொறுப்பாளர்களும் பங்கேற்றிருந்தனர். Read the rest of this entry »

இன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முழுமையாக உண்மைக்கு புறம்பானது

இலங்கையில் இன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முழுமையாக உண்மைக்கு புறம்பானது என போலீஸார் தெரிவித்துள்ளனர். போலீஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனைக் குறிப்பிட்டார். வெள்ளவத்தை, பஞ்சிகாவத்தை, கோட்டை ரயில் நிலையம் மற்றும் நாவல உள்ளிட்ட பகுதிகளின் மீது இன்றைய தினம் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக அறிக்கையொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.  Read the rest of this entry »

சமூக வலைத்தளங்கள் மீண்டும் முடக்கம்

தற்போதய அமைதியற்ற சூழலை கருத்திற்கொண்டு, இலங்கையில் மீண்டும் சமூக வலைத்தளங்கள், செயலிகள் மீது தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைக்கு அமைய, சமூக வலைத்தளங்கள் மூலம் போலியானதும், தேவையற்ற தகவல்கள் பரவுவதன் மூலம் எழும் பிரச்சினைகளை தடுக்கும் வகையில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.