அன்பான வாசகர்களுக்கு, எமது சங்கைமிக்க ரமழான் வாழ்த்துக்கள்

ramadan-kareem-wallpapersஉலகின் பெரும்பாலான பகுதிகளில் சங்கைமிக்க ரமழான் ஆரம்பமாகிவிட்டது. நல்லமல்களின் பக்கம் மக்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். இன்னும் சில பகுதிகளில் ரமழான் பிறை தென்படவில்லை. அப்பிரதேசங்களிலும் ரமழானை வரவேற்க அதிக ஆர்வத்துடன் மக்கள் காத்திருக்கின்றனர். அல் குர்ஆன் இறக்கப்பட்ட இந்த மாதம் ஓர் சங்கைமிக்க மாதமாகும். Read the rest of this entry »

வாழ்வின் சகல அமசங்களிலும் மனிதனை புனிதனாக்கும் மகத்தான ரமழான் !

– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

 ஷஹ்பான் மாதத்தின் இறுதிநாளில் நபியவர்கள் எமக்கு மத்தியில் பின்வருமாறு உரையாற்றினார்கள், ‘மக்களே மகத்தான ஒரு மாதம் உங்களிடம் வந்திருக்கிறது. இது பறக்கத் பொருந்திய மாதம். ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவு இந்த மாதத்திலேயே காணப்படுகிறது. இதன் பகழ்ப் பொழுதுகளில் நோன்பு நோற்பது கடமையாகும். இரவுப் பொழுதுகளில் நின்று வணங்குவது சுன்னத்தாகும். Read the rest of this entry »