நாட்டு மக்களுக்கு (30) பிரதமர் விடுத்துள்ள விசேட அறிக்ைகயில் தெரிவித்தார். எமது புலனாய்வுப் பிரிவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பாதுகாப்புப் படையினரும் இந்த அனைத்து நடவடிக்கைகளிலும் முறையாக ஈடுபட்டுவருகின்றனர். இதன்மூலம் எஞ்சியுள்ள சிலரையும் நாம் விரைவில் கைதுசெய்ய முடியும்.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நான் நிஹாப் மற்றும் புர்கா உடைகளுக்கான தடைக்கு நான் எதிர்ப்புத் தெரிவித்ததாக சில ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டதும் மேற்படி செயற்பாட்டின் பின்னணியே. உண்மையில் முஸ்லிம் தலைவர்கள் மேற்கொண்ட இந்த யோசனைக்கு முழு அமைச்சரவையும் இணக்கம் தெரிவித்தது. எனினும், ஊடகங்கள் மேற்கொண்ட இந்தப் பொய்ப்பிரசாரத்தில் சாதாரண மக்கள் மட்டுமன்றி மதத் தலைவர்களும் ஏமாற்றப்பட்டனர். இதிலிருந்து தெரியவருவது, ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதேயாகும். வெசாக் பண்டிகையின் பெறுமதி தெரியாதவர்கள் இதனை சீர்குலைப்பதற்குத் தயாராகும் இத்தகைய ஊடகத்தினர் எந்தத் தர்மத்தைச் சேர்ந்தவர்கள் என என்னால் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது.

இது சாதாரணமான நிலைமை அல்ல. உலகப் பயங்கரவாதத்துக்கு நாம் அகப்பட்டுள்ள நிலையாகும். எதிர்காலத்திலும் உலகப் பயங்கரவாதத்துக்கு முகங்கொடுத்து அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு நாம் தயாராகவேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும். இத்தகையதொரு காலகட்டத்தில் மத ரீதியான மோதல்கள் மற்றும் இனரீதியான மோதல்களை ஏற்படுத்துவதற்காகப் பொய் பிரசாரங்களை மேற்கொள்ளும் நபர்கள் மற்றும் ஊடகங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரும். அனைவருக்கும் நான் தெரிவிக்க விரும்புவது, பல்வேறு ஊடகங்கள் மூலம் காதால் கேட்பதும் கண்களால் பார்ப்பதையும் முழுமையாக நம்பவேண்டாம். அனைத்திலும் அவதானமாக செயற்படுவது முக்கியம். பௌத்த மதத்தினராகிய நாம் மிக விசேடமாகக் கொண்டாடும் வெசாக் பண்டிகை வருகின்றது. வெசாக் பண்டிகை ஒத்திப்போட முடியாதவொரு பண்டிகையாகும். அன்றைய தினத்தில் நாம் தானதர்மங்கள் உட்பட மத வழிபாடுகளில் ஈடுபடுவோம்.

விஹாராதிபதிகளான தேரர்கள் இது தொடர்பில் தமது பரிபாலன சபையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என நான் நம்புகின்றேன். அதற்காக பிரதேச பாதுகாப்புப் பிரிவினர் அவசியமான ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுக்கத் தயாராகவுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் நாட்டுக்காக நாம் அனைவரும் கைகோத்து செயற்பட வேண்டும். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பாதுகாப்புப் பிரிவினருடன் நான் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். உலகப் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகும். இதனைக் கருத்தில் கொண்டு நாம் அன்றாட செயற்பாடுகளை ஆரம்பிப்போம். அவதானத்துடன் செயற்படுவோம். மக்கள் நலனுக்காக முப்படையினரும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.