இலங்கை மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையில் நிலைகொண்ட பயங்கரவாதத்தை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சஹரான் இந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவர் என கூறிய போதிலும், அவர் இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இல்லை எனவும் அவர் கூறினார்.
அமைப்பொன்றின் தலைவர் ஒருபோதும் தற்கொலை குண்டுத் தாக்குலை நடத்தி உயிரிழப்பதற்கான வாய்ப்புக்கள் கிடையாது என்றும், தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.