– ஹாசிப் யாஸீன்
சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில்சாய்ந்தமருது, மாளிகைக்காடு மூன்று மீனவசங்கங்களின் பங்குபற்றலுடன் நாளை மே (01) புதன்கிழமை இடம்பெறவிருந்த ‘தென்கிழக்குகடலோர மே தினம்‘ நிகழ்வு நாட்டின்தற்போதைய அசாதாரண சூழ்நிலையினைக்கருத்திற்கொண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாகசிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத்ஏ.மஜீத் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வு சம்பந்தமாக அவர் மேலும்தெரிவிக்கையில்,
மே 01 தொழிலாளர் தினத்தை இம்முறைசாய்ந்தமருது, மாளிகைக்காடு மீனவசமூகத்துடன் இணைந்து சிலோன் மீடியா போரம்தென்கிழக்கு கடலோரம் சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசத்தில் கொண்டாடும்முகமான பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தது.
அதாவது மே தினத்தன்று மீனவ சங்கங்களின்அங்கத்தவர்களும் போரத்தின் அங்கத்தவர்களும்ஒன்று சேர்ந்து தென்கிழக்கு கடலோரம்மாளிகைக்காடு கடற்கரை வீதியிலிருந்துசாய்ந்தமருது கடற்கரை வீதியிலுள்ள அப்பிள்தோட்ட வளாகம் வரை பேரணியாக நடந்துவந்து அங்கு அமைக்கப்படவிருந்த மேடையில்மே தின பொதுக்கூட்டம் நடாத்துவதற்கும்மற்றும் மீனவ தொழிலாளர் ஐவருக்கு ‘கடினஉழைப்பாளி‘ எனும் கௌரவம் வழங்கி மீனவமுதலாளிமார் சங்க உறுப்பினர்கள்கௌரவிப்பதுமான ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தன.
இவ்வாறான பிரமாண்டமான ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்த போதிலும் நாட்டின்பாதுகாப்பு மற்றும் அசாதாரண சூழ்நிலையினைக்கருதி மேற்படி நிகழ்வுகள் யாவும் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக சிலோன் மீடியா போரத்தின்தலைவர் றியாத் ஏ.மஜீத் மேலும் தெரிவித்தார்.